வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் : வெளியான காரணம்

Sri Lankan Peoples Hospitals in Sri Lanka School Incident School Children
By Rakshana MA Feb 26, 2025 04:07 AM GMT
Rakshana MA

Rakshana MA

கம்பளை பிரதேசத்தில் 149 மாணவர்கள் கல்வி பயிலும், தி.மு.ஜயரத்திர ஆரம்ப பாடசாலையில் 9 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 9 மாணவர்களும், கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆரம்ப பாடசாலையில் மதிய இடைவேளையின் போது குளவி கொட்டுதல் ஏற்பட்டுள்ளதுடன் உடனடியாக பாடசாலையை மூடுவதற்கும் நடவடிக்கையையும் அதிபர் எடுத்துள்ளார்.

தேங்காய் விலைக்கான தீர்வு விரைவில்..!

தேங்காய் விலைக்கான தீர்வு விரைவில்..!

குளவி வரக்காரணம் 

மலைப்பகுதிகளில் நிலவும் பலத்த காற்று மற்றும் குளிர் காலநிலையால், இந்த குளவிகள் கலைந்து, பாடசாலை மாணவர்கள், தோட்ட மக்கள் மற்றும் கிராம மக்களை தாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் : வெளியான காரணம் | 9 Students Admitted To Hospital For Bitten Wasp

இந்த நிலையில், இந்த மாதம் மாத்திரம் கம்பளையைச் சுற்றியுள்ள மூன்று பாடசாலைகளில் குளவி கொட்டியதில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 80 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கம்பளை, உலப்பனை மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டியதைத் தொடர்ந்து அறுபது மாணவர்களும் பெற்றோர்களும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

சுயதொழில் முனைவோருக்கான வரி வீதம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

சுயதொழில் முனைவோருக்கான வரி வீதம் குறித்து அரசாங்கம் வெளியிட்ட தகவல்

குளவித்தாக்குதலுக்கு..

இந்த மாதத்தில் மட்டும் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் குளவித் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் : வெளியான காரணம் | 9 Students Admitted To Hospital For Bitten Wasp

எனவே, உரிய அதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி, இந்த துன்பங்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் 5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு

இலங்கையில் 5 மாகாணங்களில் சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவு

அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்

அதிகரிக்கவுள்ள மின் கட்டணம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW