தேங்காய் விலைக்கான தீர்வு விரைவில்..!

Sri Lankan Peoples Nalinda Jayatissa Coconut price
By Rakshana MA Feb 25, 2025 11:54 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தேங்காய் ஒன்றின் விலையானது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுப்பட்டுள்ளதை தாம் ஏற்றுக் கொள்வதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (25.02.2025) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் என்ற ரீதியில் தேங்காய் பிரச்சினையை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஊடாக சதோச நிறுவனத்திடம் ஒப்படைத்து மக்களுக்கு சாதாரண விலைக்கு தேங்காயை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் சில பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை

மேலும் சில பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை

எடுக்கப்பட்ட நடவடிக்கை 

அத்துடன், விலங்குகளின் பிரச்சினை, உர பற்றாக்குறை மற்றும் காலநிலை காரணமாக அதிக அளவில் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது.  

இந்த நிலையில், தற்போதைய தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக கம்பஹா மாவட்டத்தில் 2.5 மில்லியன் தென்னங்கன்றுகளை நடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் விலைக்கான தீர்வு விரைவில்..! | Solution To Coconut Price Problem Is Coming Soon

மேலும், தேங்காய் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த சிறப்பு தேங்காய் சாகுபடி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மதுபான நுகர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் மதுபான நுகர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தங்க விலையில் பதிவான மாற்றம்

தங்க விலையில் பதிவான மாற்றம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW