மேலும் சில பாடசாலைகளுக்கு 27ஆம் திகதி விடுமுறை
Shivaratri
Ministry of Education
Sri Lanka
Sri Lankan Schools
By Mayuri
மகா சிவராத்திரியை முன்னிட்டு சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளரின் கையெப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எடுக்கப்பட்ட தீர்மானம்
அத்துடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு குறித்த தினத்தில் விடுமுறை வழங்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே தற்போது சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.