திரைப்படமாகவுள்ள மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு ! நாமல் வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த விடயத்தினை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
திரைப்பட திட்டங்கள் முன்னெடுப்பு
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
வாழ்க்கை வரலாற்றுப் படத்துடன் கூடுதலாக, ஒரு குறும்படம் மற்றும் ஒரு வாழ்க்கை வரலாறும் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பாரா என்று கேட்டபோது, அதில் தனது குழந்தைப் பருவ விவரங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், நடிக்க விருப்பமுள்ள எவரும் இந்தப் பாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |