அம்பாறையில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஐக்கிய முச்சக்கர வண்டி உரிமையாளர் கூட்டுறவு சங்க கூட்டமும், வருடாந்த இப்தார் நிகழ்வும் குறித்த சங்கதினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சங்கத்தின் செயலாளர் பி.எம்.முஹினுடீனின் வழிகாட்டலில், சங்கத்தின் தலைவர் யூ.கே.நவாஸின் தலைமையில் நேற்று(03) இடம்பெற்றுள்ளது.
இப்தார் நிகழ்வு
தலைவரின் சார்பில் சங்க கணக்காய்வாளர் எஸ்.பஸ்லூனினால் தலைமை உரை மற்றும் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து வருடாந்த இப்தார் நிகழ்வும் இராப்போசன நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
மேலும், இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக கல்முனை தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் மற்றும் கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.முத்தஸ்ஸிர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




