கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு திடீர் விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்
Parliament of Sri Lanka
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Kalmunai
By Rakshana MA
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.அஸ்ரப் தாஹிர் திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தேசிய ரீதியாக இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொண்டமையை பாராட்டும் நோக்கில் இன்று(03) இவ்விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
விசேட வேலைத்திட்டங்கள்
இந்நிலையில், அங்குள்ள குறைநிறைகளை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹிதுல் நஜீமிடம் கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் அங்கு பணிபுரியும் வலயக் கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர்கள், பிரதி கல்வி பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரை சந்தித்த உறுப்பினர், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் கல்முனை வலய கல்வி மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





