நிந்தவூரின் விளையாட்டுத்துறை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நிந்தவூரின் விளையாட்டுத்துறையை மீள் செப்பம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்(Ashraf Thahir) தலைமையில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, நேற்று(03) நிந்தவூரில் விளையாட்டு துறை சார்ந்த பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நோக்கம்...
இக்கலந்துரையாடலில், நிந்தவூரின் விளையாட்டுத்துறை பின்தங்கிய நிலையில் காணப்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்ததுடன், இதற்கான தீர்வுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அத்துடன் பாடசாலை முதல் சர்வதேச மட்டத்திற்கான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதில் உள்ள தடைகள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றை நிவர்த்தி செய்வதற்கான தீர்வுகள், திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
மேலும், இந்த நிகழ்வில் விளையாட்டு துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், தொடர் முயற்சியின் மூலம் எமது வீரர்களை உருவாக்குவது என்ற அடிப்படையில், தொடர்ச்சியாக இது செயல்படும் என உறுதி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



