சஜித் அநுரவோடு பேசி ஒப்பந்தம் செய்திருந்தால் பல சபைகளை கைப்பற்றியிருக்கலாம்..!
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில், தனித்து ஆட்சி அமைக்கக்கூடிய 157 ஆசனங்களைப் பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்த பல ஆட்சியாளர்கள், இன்று ஒவ்வொரு சபையிலும் பேரம் பேசும் நிலைக்கு வந்துவிட்டனர் என முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் விமர்சித்துள்ளார்.
நேற்று (30) மாலை கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.
புத்திசாலித்தனமான அரசியல்
தொடர்ந்து அவர் கூறியதாவது, “புத்திசாலித்தனமாக அரசியல் செய்பவர்கள், மலையகத் தேர்தல்களில் தனித்தனியாக போட்டியிட்டும், பின்னர் கையொப்ப ஒப்பந்தங்கள் மூலம் ஆட்சி அமைக்கக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளனர்.
அதேபோன்று, முஸ்லிம் சமூகமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துவமாக போட்டியிட்டிருந்தால், குறைந்தது 250க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்றிருக்கும் வாய்ப்பு இருந்திருக்கலாம்,” என்றார்.
மேலும் அவர் சுட்டிக்காட்டியதாவது, “தற்போது வென்றுள்ள 140 ஆசனங்களுடன், எந்த ஒரு தலைமையோடும் பேரம் பேசாமல், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஜேவிபியின் அநுரகுமார ஆகியோருடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால், பல உள்ளூராட்சி சபைகளை தாங்களே ஆட்சியமைக்க முடிந்திருக்கும்.”
பேரம் பேசும் அரசியல்
இதை அடுத்து அவர் வலியுறுத்தியது, “எதிர்கால தேர்தல்களில் – உள்ளூராட்சி, மாகாண சபை போன்ற அனைத்து நிலைகளிலும் தனிப்பட்ட சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம், சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், பேரம் பேசும் அரசியல் சூழலுக்கு விடை கொடுக்கவும் முடியும் என்ற எண்ணத்தில் மாற்றுக்கருத்தில்லை,” எனக் கூறினார்.
மேலும் இவ்வாறு, முஸ்லிம் அரசியலின் சுயநிலைமை மற்றும் குரலுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டிய தேவையை முன்னாள் பிரதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |