ஆன்மீக வழிபாட்டை படம்பிடித்த பொடி சஹ்ரான் விடுதலை
Police spokesman
Colombo
Sri Lanka
Western Province
By Rakshana MA
கொழும்பின் பம்பலப்பிட்டியில் நடைபெற்று வரும் தாவூதி போரா சமூகத்தினரின் ஆன்மீக மாநாட்டை படம் பிடித்ததற்காக கைது செய்யப்பட்ட பொடி சஹாரான் என்றும் அழைக்கப்படும் 27 வயது முகமட் சஃப்ரூல் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பம்பலப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
விடுதலை
எனினும், சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் அவரிடம், பயங்கரவாதம் அல்லது தீவிரவாதம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்தே, கொழும்பு மேலதிக நீதவான் அவரை விடுதலை செய்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |