கடலரிப்பினால் பாதிப்புக்குள்ளான கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல்

Sri Lankan Peoples Climate Change Eastern Province Floods In Sri Lanka
By Rakshana MA Jan 23, 2025 11:08 AM GMT
Rakshana MA

Rakshana MA

கடலரிப்பு காரணமாக கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் எல்லைச் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

அண்மைக்காலமாக நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் தொடர்ந்தும் கடலரிப்பின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்கு கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அவசர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென பள்ளிவாசல் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

காரைதீவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விழிப்புணர்வு செயற்றிட்டம்

காரைதீவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விழிப்புணர்வு செயற்றிட்டம்

அதிகரித்துள்ள கடலரிப்பு

மேலும், கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் பின்புறமாக அமைக்கப்பட்ட தென்னந்தோட்டமும் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள சில தென்னை மரங்களும் முறிந்து விழுந்துள்ளன.

கடலரிப்பினால் பாதிப்புக்குள்ளான கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் | Kalmunai Mosque Damaged By Sea Erosion

இது தவிர அடிக்கடி தற்போது கடல் அலை சீற்றம் அதிகரித்ததன் விளைவால் இப்பகுதிகள் கடலரிப்பிற்குள்ளாகி பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

அத்துடன் இங்கு காலை முதல் மாலை வரை மப்பும் மந்தாரமுமாக அடை மழை பெய்த வண்ணம் உள்ளது.

மக்களுக்கு நிவாரணம்! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி

மக்களுக்கு நிவாரணம்! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி

பாதிக்கப்படும் மக்கள்

அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கல்முனை, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாக காணப்படுகின்றமை போன்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடலரிப்பு மிக கோரமாக காணப்படுகின்றது.

கடலரிப்பினால் பாதிப்புக்குள்ளான கல்முனை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் | Kalmunai Mosque Damaged By Sea Erosion

இந்த நிலையில், இவ்வாறான காலநிலை மாற்றங்களினால் கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதினாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களும் வெகுவாக பாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு! மக்களுக்கான அறிவித்தல்

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு! மக்களுக்கான அறிவித்தல்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery