தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lankan Peoples Coconut price
By Rakshana MA Jan 22, 2025 05:33 AM GMT
Rakshana MA

Rakshana MA

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (21.01.2025) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், இதற்காக 1,437 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

அதிகரித்துள்ள தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

கோரிக்கை 

 வட மாகாணத்தில் 40,000 ஹெக்டயர் தென்னை மரங்களை நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், நாட்டில் 5 ஹெக்டயருக்கும் குறைவான தென்னை தோட்டங்களுக்கு இலவச உரம் வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

தேங்காய் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! | Coconut Shortage Problems Solutions In Sri Lanka

அத்துடன் ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் உரத்தில் 27,500 மெட்ரிக் தொன் உரத்தை தேங்காய் பயிர்செய்கைக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தற்போது நிலவும் தேங்காய் நெருக்கடியால், சந்தையில் ஒரு தேங்காயின் விலை தற்போது 250 ரூபாவாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

அரச ஊழியர்களுக்கான இரண்டாம் மொழி கற்கை நெறி சான்றிதல் வழங்கும் நிகழ்வு

அரச ஊழியர்களுக்கான இரண்டாம் மொழி கற்கை நெறி சான்றிதல் வழங்கும் நிகழ்வு

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் : ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் : ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW