கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் மன்னிப்பு கோரிய அலிசப்ரி
இலங்கையில் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதி என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்பு கோருகின்றேன் என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதியே கடவுச்சீட்டு புத்தகங்கள் கிடைக்கப்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்த விதமான ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு விவகாரம்
இன்று முதல் தினமும் 1000 கடவுச்சீட்டுகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |