அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்

Government Employee Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Feb 03, 2025 05:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரச நிறுவனங்களின் தயார்படுத்தல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை ஒரு விசேட நிகழ்வாகக் கருதி, 01/2025 சுற்றறிக்கையின் சில விதிகளை செயல்படுத்த வேண்டாம் என்று அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உப்பின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான தகவல்

உப்பின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான தகவல்

விசேட அறிவித்தல்

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 1 முதல் 7ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு அனைத்து அரச கட்டடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் | Important Announcement For Government Institutions

பெப்ரவரி 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் கட்டடங்களை மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் தீ விபத்து! தீக்கிரையான வர்த்தக நிலையம்

மட்டக்களப்பில் தீ விபத்து! தீக்கிரையான வர்த்தக நிலையம்

அலங்காரம் 

தற்போது மின்விளக்குகளால் கட்டடங்களை அலங்கரிக்கும் செயற்பாட்டை இரத்துச் செய்வதற்கு பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் | Important Announcement For Government Institutions

மின்சார பாதுகாப்பு மற்றும் மின் அலங்காரச் செலவு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்கள், பரிந்துரைகள் மற்றும் பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்!

சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்!

கமல்ஹாசனின் திரைப்படத்துடன் ஜனாதிபதி மாளிகைகளை ஒப்பிட்ட ஜனபதிபதி அநுர

கமல்ஹாசனின் திரைப்படத்துடன் ஜனாதிபதி மாளிகைகளை ஒப்பிட்ட ஜனபதிபதி அநுர

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW