மட்டக்களப்பில் தீ விபத்து! தீக்கிரையான வர்த்தக நிலையம்

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Accident
By Rakshana MA Feb 02, 2025 10:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அமைந்திருந்த கைத்தொலைபேசி விற்பனை வர்த்தக நிலையம் ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம், நேற்றிரவு(01) பத்து மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நவீன ரக கைத்தொலைபேசி விற்பனை நிலையமான குறித்த வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் பல கோடி ரூபாய் பெறுமதியான கைத்தொலைபேசிகள் எரிந்து நாசமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்முனையில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாதணி வழங்கி வைப்பு

கல்முனையில் வசதி குறைந்த மாணவர்களுக்கு பாதணி வழங்கி வைப்பு

தீக்கிரரையான வர்த்தக நிலையம்

விபத்தின் போது, மட்டக்களப்பு மாநகர சபை, காத்தான்குடி நகர சபை தீயணைப்பு படையினர் இரு மணித்தியாலங்கள் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மட்டக்களப்பில் தீ விபத்து! தீக்கிரையான வர்த்தக நிலையம் | Mobile Shop On Fire In Batticaloa

இருந்த போதிலும் அனைத்து தொலைபேசிகளும் பற்றிகள் மற்றும் வர்த்தக நிலையத்தில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

காத்தான்குடி பொலிஸார், இராணுவத்தினர் ஸ்தலத்துக்கு விரைந்து தீயணைப்பு படை வீரர்களுக்கு உதவி புரிந்தனர்.

பொதுமக்களும் இளைஞர்களும் பெருமளவிலாக வருகை தந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.

டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

தீவிர விசாரணை

மேலும், ஸ்தலத்துக்கு விரைந்த நகர சபை செயலாளர் மற்றும் மின்சார சபை மின் பொறியியலாளர், மின்சார சபை ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மட்டக்களப்பில் தீ விபத்து! தீக்கிரையான வர்த்தக நிலையம் | Mobile Shop On Fire In Batticaloa

சம்பவத்தின் காரணமாக மேற்படி வர்த்தக நிலையத்திற்கு பல கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த ஜனாதிபதியின் தமிழ்!

யாழில் பலரின் கவனத்தை ஈர்த்த ஜனாதிபதியின் தமிழ்!

உயிர் தியாகம் செய்த உயர்மட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட அபு உபைதா

உயிர் தியாகம் செய்த உயர்மட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட அபு உபைதா

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGallery