உயிர் தியாகம் செய்த உயர்மட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட்ட அபு உபைதா
ஹமாஸின் இராணுவ பிரிவான அல்கசாம் படையின் தலைவரும், அக்டோபர் 7 நடவடிக்கையின் சூத்திரதாரியுமான முகமது டைப் ஸஹீத் எனும் நிலையை அடைந்ததாக இராணுவ செய்தி தொடர்பாளர் அபு உபைதா(Abu Obaida) உறுதிப்படுத்தியுள்ளார்
முகமது டைபின் மரணத்தை உறுதிப்படுத்த போதிய கால அளவு மற்றும் சூழல் தேவைப்பட்ட நிலையில், உரிய ஆதாரங்களின் அடிப்படையில் அவர் ஸஹீத் அடைந்தது உறுதி செய்யப்படுவதாக அபு உபைதா தெரிவித்துள்ளார்
ஸஹீதுடைய தலைவர்கள்
கடந்த 30 ஆண்டுகளாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு நிர்வாகத்திற்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கியதாகவும், பாலஸ்தீன வரலாற்றில் அவரது தியாகம் பொறிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் உயர் தியாகம் அடைந்த ஹமாஸின் இராணுவ உயர்மட்ட தலைவர்களின் பட்டியலையும் அபு உபைதா வெளியிட்டுள்ளார்.
ஹமாஸ் இராணுவ பிரிவின் துணை தலைமை பணியாளர் மர்வான் ஈசா மற்றும் அபு அல்பாரா, ஆயுதம் மற்றும் போர் சேவை பிரிவின் தலைவர்கள் காசி அபு தாமா, அபு மூஸா மற்றும் பணியாளர் தேர்வு குழு தலைவர் ரீட் தாபத், அபு முகமத் மற்றும் கான் யூனிஸ் படைப்பிரிவுத் தளபதிகளான ரஃபி சலாமா, அபு முகமத் வடக்கு பிரிக்கேட் கமாண்டர்கள் அஹ்மத் அல் காண்டோ, அபு அனாஸ் மற்றும் மத்திய பிரிவு தளபதிகள் ஐமன் நௌபால், அபு அஹ்மத் ஆகியோர் ஸஹீத் எனும் நிலையை அடைந்ததாக அபு உபைதா குறிப்பிட்டுள்ளார்
மேலும், வீர மரணம் அடைந்த ஹமாஸ் தலைவர்களுக்கு இஸ்லாமிக் ஜிஹாத் அல் - அக்சா தியாகிகள் படை உள்ளிட்ட சக போராளிக் குழுக்கள் இரங்களையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |