உப்பின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான தகவல்

Sri Lankan Peoples Economy of Sri Lanka Money
By Rakshana MA Feb 02, 2025 12:50 PM GMT
Rakshana MA

Rakshana MA

இந்த மாதம் உப்பின் விலை அதிகரிக்கக் கூடும் என அம்பாந்தோட்டை உப்பு நிறுவனத் தலைவர் டீ.கே.நந்தன திலக(Nandana Thilak) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதில் ஏற்படும் செலவுகள் அதிகரித்துள்ளதால் இவ்வாறு உப்பின் விலை அதிகரிக்கக் கூடும்.

சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்!

சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டம்!

உப்பின் விலை

அத்துடன், சமீபத்திய சீரற்ற காலநிலை காரணமாக உள்ளுர் உப்பளங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது.

உப்பின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான தகவல் | Salt Price In Sri Lanka

அதற்கமைய இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1485 மெட்ரிக் தொன் முதல் தொகுதி உப்பு கடந்த ஜனவரி 27ஆம் திகதி நாட்டை வந்தடைந்தது.

இந்நிலையில், 400 கிராம் உப்பு பக்கெட்டின் விலை 120 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் உப்பு பக்கெட்டின் விலை 180 ரூபாவாகவும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமென அவதானிக்கப்பட்டது.

காரைதீவில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான நடமாடும் சேவை

காரைதீவில் பாதுகாப்பான புலம்பெயர் தொழில் தொடர்பான நடமாடும் சேவை

பதனிடப்படாத உப்பு 

அதற்குத் தீர்வாக, வரி வீதத்திற்கமைய பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

உப்பின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான தகவல் | Salt Price In Sri Lanka

இதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை அரச வர்த்தக (பலநோக்கு) கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்து உள்நாட்டு உப்பு உற்பத்தியாளர்கள் ஊடாக சந்தைக்கு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மூதூரில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்! ஒத்துழைப்பு வழங்கியுள்ள மக்கள்

மூதூரில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம்! ஒத்துழைப்பு வழங்கியுள்ள மக்கள்

டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW