தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Election Commission of Sri Lanka Government Employee Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 11, 2024 12:42 PM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தலுக்காக 225,000 அரசாங்க ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்களென்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

இராணுவத்தினரின் உதவி

இந்தநிலையில், தேவைப்பட்டால் மாத்திரம் இராணுவத்தினரின் உதவியையும் பெற்றுக்கொள்வதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Government Servants Engaged In Election Duty

இதன்போது, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகங்களில் 700 உத்தியோகத்தர்களே உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணி: வழங்கப்பட்டுள்ள அனுமதி

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணி: வழங்கப்பட்டுள்ள அனுமதி

அரச அதிகாரிகளின் சேவை

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை இந்த அதிகாரிகளின் சேவை தேவைப்படுவதாகவும் இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு | Government Servants Engaged In Election Duty

மேலும், கிராம அலுவலக உத்தியோகத்தர்களும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை எந்தவொரு தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோமெனவும் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட கார்

மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட கார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW