ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணி: வழங்கப்பட்டுள்ள அனுமதி

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 11, 2024 10:00 AM GMT

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன.

முறைப்பாடுகள்

அதன்படி, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டம் மீறல் மற்றும் வன்முறை தொடர்பில் நேற்றைய தினம் 51 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணி: வழங்கப்பட்டுள்ள அனுமதி | Information About The Presidential Election

அதன்படி, தேர்தல் சட்டம் மீறல் தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 25 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 26 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW