தங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Gold Price in Sri Lanka Sri Lanka Today Gold Price Sri Lankan Peoples Money
By Rakshana MA May 27, 2025 06:49 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (27) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது நேற்று 1,005,827 ரூபாவாக காணப்பட்ட நிலையில், இன்று 1,002,963 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள்..!

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள்..!

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 35,380 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 283,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | Gold Price Today In Sri Lanka

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 32,440 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 259,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,960 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 247,700 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

அதிரடியான சுற்றிவளைப்பில் சிக்கிய 477 பேர்! வெளியான தகவல்

அதிரடியான சுற்றிவளைப்பில் சிக்கிய 477 பேர்! வெளியான தகவல்

செட்டியார் தெரு தங்க விலை

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க விலை நிலவரங்களின்படி 24 கரட் தங்கப் பவுண் 265,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு | Gold Price Today In Sri Lanka

இதேவேளை, 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 245,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு அல்-ஹம்றா பாடசாலை ஆசிரியர் தெரிவு

இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு அல்-ஹம்றா பாடசாலை ஆசிரியர் தெரிவு

ஆட்சி அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஆட்சி அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW