இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு அல்-ஹம்றா பாடசாலை ஆசிரியர் தெரிவு
Sri Lankan Peoples
Eastern Province
School Incident
By Rakshana MA
இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு (SLTES) ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலை ஆசிரியர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதற்கமைய, குறித்த ஆசிரியருக்கு இன்று (26) கௌரவிக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
ஆசிரியர் கௌரவிப்பு
இந்த நிலையில், இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர் ஒலுவில் அல்-ஹம்றா பாடசாலையில் கடமையாற்றும் எஸ்.ஹாஸீக் ஆவார்.
இவரை கௌரவிக்கும் வகையில், காலை ஆராதனை நிகழ்வின் போது பாடசாலை அதிபர் யூ.கே.அப்துர் ரஹீம் தலைமையில் ஹாஸீக் ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் பிரதி அதிபர்களான ஏ.கமருன் நிஷா, ஜே.வஹாப்தீன், உதவி அதிபர் எம்.எச்.எம்.நசீம் உட்பட ஆசிரியர்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும், பாராட்டையும் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


