தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை
தேர்தல் செலவுகள் தொடர்பான அறிக்கைகளை இந்த மாதம் 28ஆம் திகதிக்குள் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்எம்.ஏ.எல். ரத்நாயக்க இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டின் 3ம் இலக்க "தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின்" கீழ், அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் பிரசார செலவுகளைக் குறித்த முழுமையான அறிக்கையை, தங்களது தேர்தல் மாவட்டத்திற்கு உரிய தெரிவத்தாட்சி அதிகாரிக்கு ஒப்படைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு
“சட்டத்தில் குறிப்பிட்ட நாளே இறுதி திகதியாக அரசு வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனை நீட்டிக்கவோ மாற்றவோ முடியாது. எந்த வேட்பாளரும் இந்த காலக்கெடுவை மீறினால், அவர்களின் விபரங்களை பொலிஸாருக்கு அனுப்புவோம்.
விபரங்களை சமர்ப்பிப்பதற்கு ஒரு நாளும் தாமதிக்க கூடாது. அதன்படி, ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் போன்று, நீதிமன்ற வழக்குகள் தொடரப்படும்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில், விதிமீறி காலத்துக்கு பின் செலவுத் தரவுகளை சமர்ப்பிப்பவர்கள் மீது வழக்குகள் தொடர நடவடிக்கை எடுக்கப்படும்.
வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் பிரச்சார செலவுகளை மிக விரிவாகக் குறிப்பிட்ட அறிக்கையைத் தயாரித்து, மே 28க்குள் ஒப்படைக்க வேண்டும் என்பது தற்போது கட்டாயமாகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |