அதிரடியான சுற்றிவளைப்பில் சிக்கிய 477 பேர்! வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Crime
By Rakshana MA May 27, 2025 06:39 AM GMT

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இதுவரை 477 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விசேட சுற்றிவளைப்பானது, நேற்று (26) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 150 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 147 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 170 பேரும், கஞ்சா செடிகளுடன் 04 பேரும், போதை மாத்திரைகளுடன் 06 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவர்களை குறிவைக்கும் சைபர் தாக்குதல்! அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கை

மாணவர்களை குறிவைக்கும் சைபர் தாக்குதல்! அமைச்சு முன்னெடுத்த நடவடிக்கை

போதைப்பொருட்களுடன் கைது 

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 193 கிராம் 577 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 190 கிராம் 398 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதிரடியான சுற்றிவளைப்பில் சிக்கிய 477 பேர்! வெளியான தகவல் | Special Police Raids Carried Out Islandwide

அதேவேளை, 08 கிலோ 743 கிராம் 155 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், 37360 கஞ்சா செடிகளும், 108 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதிரடியான சுற்றிவளைப்பில் சிக்கிய 477 பேர்! வெளியான தகவல் | Special Police Raids Carried Out Islandwide

முக்கிய கலந்துரையாடலுக்காக இந்தியா சென்றுள்ள நாடாளுமன்ற குழு

முக்கிய கலந்துரையாடலுக்காக இந்தியா சென்றுள்ள நாடாளுமன்ற குழு

கல்முனை வெஸ்லி பாடசாலைக்கு தனியார் அமைப்பினால் வழங்கப்பட்ட சன்மானங்கள்!

கல்முனை வெஸ்லி பாடசாலைக்கு தனியார் அமைப்பினால் வழங்கப்பட்ட சன்மானங்கள்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW