கல்முனை வெஸ்லி பாடசாலைக்கு தனியார் அமைப்பினால் வழங்கப்பட்ட சன்மானங்கள்!
கல்முனை(Kalmunai) வெஸ்லி உயர்தர பாடசாலைக்கு வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் வழங்கும் நிகழ்வு ஒன்று தனியார் அமைப்பு ஒன்றினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது கல்லூரியின் முதல்வர் எஸ்.கலையரசனிடம் இன்று (26) கையளிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மருதமுனை பைத்துல் ஹெல்ப் நிறுவனத்தின் தலைவர் எம்.எச்.றைசுல் ஹக்கீமினால் வகுப்பறைகளுக்கான பெயர் பலகைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் தேவைகள்
அண்மைக் காலங்களில் இவ்வமைப்பினூடாக கிழக்கு மாகாணங்களிலுள்ள பல பாடசாலைகளுக்கு நீர்த்தொட்டி விநியோகம் கற்றல் உபகரணங்கள் மற்றும் குடிநீர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இலங்கை பைத்துல் ஹெல்ப் அமைப்பின் பிரதானி ரைஸுல் ஹக்கீம் சமூக நலன்கருதி இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
அத்துடன் பைத்துல் ஹெல்ப் அமைப்பு அரச காரியாலயங்கள் பாடசாலைகள் பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல் மாணவர்களின் கல்விக்கு கைகொடுத்தல் குர்ஆன் பிரதிகளை இலவசமாக வழங்குதல் என பல சமூக நல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
மேலும், இந்த நிகழ்வில் நிறுவனத்தின் உயர் பீட உறுப்பினர்கள் மற்றும் பிரதி அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







