இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப்பயணிகள்..!
இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 10 இலட்சத்து 6 ஆயிரத்து 97 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 196,129 ஆகும்.
சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை
இந்நிலையில், ரஷ்யாவிலிருந்து 110,043 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 94,714 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 67,998 சுற்றுலாப் பயணிகளும்,பிரான்ஸிலிருந்து 56,302 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
அதேவேளை, சீனாவிலிருந்து 55,319 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 43,014 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |