மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய 17 சுயேட்சைக் குழுக்கள்

Batticaloa Eastern Province General Election 2024
By Laksi Oct 07, 2024 03:34 PM GMT
Laksi

Laksi

பொதுத் தேர்தலுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இரண்டு சுயேட்சைக்குழுக்கள் மற்றும் ஒரு அரசியல் கட்சி இதுவரை வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (07) பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழப்பு

பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் 

அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் தற்போது பழைய மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய 17 சுயேட்சைக் குழுக்கள் | General Election Independent Groups Place Deposits

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சுயேட்சை குழுக்கள் தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளதுடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் இரண்டு சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஐந்து தேர்தல் மீறல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் எந்தவித வன்முறைகளும் பதிவு செய்யப்படவில்லை.

இலங்கை - உலக வங்கியிடையே ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை - உலக வங்கியிடையே ஒப்பந்தம் கைச்சாத்து

வாக்களிப்பு நடவடிக்கைகள்

தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு சுயேட்சைக்குழுக்களில் மூவரும் அரசியல் கட்சிகளை சேர்ந்த செயலாளர் உட்பட நான்கு பேர் மட்டுமே வருகை தரமுடியும்.மாவட்ட செயலக வளாகத்திற்குள் ஊர்வலத்திற்கும் பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் கட்டுப்பணம் செலுத்திய 17 சுயேட்சைக் குழுக்கள் | General Election Independent Groups Place Deposits

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 469,686 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் நாளை (08) தங்களது அஞ்சல் வாக்குகளிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும்  ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டி

பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW