பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டி
எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிட உள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (6) இடம்பெற்ற கட்சியின் நியமன குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு எமது அம்பாறை மாவட்ட குழு தீர்மானம் எடுக்கவில்லை.
தனித்து போட்டி
தற்போது எமது கட்சியின் செயலாளருக்கு தனித்து போட்டியிட வேண்டும் என கோரியதன் பிரகாரம் தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டியிடும்.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் தேசிய கூட்டணி தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் இணைந்து போட்டியிடும் எனவும் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |