இலங்கை - உலக வங்கியிடையே ஒப்பந்தம் கைச்சாத்து

Anura Kumara Dissanayaka World Bank Economy of Sri Lanka Dollars
By Laksi Oct 07, 2024 11:36 AM GMT
Laksi

Laksi

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும்  மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு  உலக வங்கியுடன் 200 மில்லியன் டொலர் பெறுமதியான மேலதிக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்தில் கைசாத்திடும் நிகழ்வு இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தமானது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ​கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டேவிட் சிஸ்லேன் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷாட் வெளிப்படுத்திய தகவல்

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரிஷாட் வெளிப்படுத்திய தகவல்

மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள்

இந்த நிதி வசதியானது இலங்கையின் முன்னெடுக்கப்படும் விரிவான மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு உலக வங்கியின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை காண்பிக்கிறது.

இலங்கை - உலக வங்கியிடையே ஒப்பந்தம் கைச்சாத்து | World Bank Approved 200 Million Us Dollars To Sl

இலங்கையின் மறுசீரமைப்பு, நிலைப்படுத்தல் மற்றும் பொருளாதாரத்தை சுமூக நிலைக்கு கொண்டு வருவதற்கான (RESET) அபிவிருத்தி கொள்கைகளுக்கு நிதியளிக்கும் (DPF) வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது.

டெக்னிகல் சந்தியில் இளம் பெண் கொலை : பொலிஸார் வெளியிட்ட தகவல்

டெக்னிகல் சந்தியில் இளம் பெண் கொலை : பொலிஸார் வெளியிட்ட தகவல்

பொருளாதார நிலைத்தன்மை

இந்த இரு வருட வேலைத்திட்டம் (2023-2024), வறுமை மற்றும் பாதிக்கப்படக்கூடி மக்கள் மீதான தாக்கத்தை குறைத்து முழுமையான பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் செயற்படுத்தப்படுகிறது.

இலங்கை - உலக வங்கியிடையே ஒப்பந்தம் கைச்சாத்து | World Bank Approved 200 Million Us Dollars To Sl

உலக வங்கியின் இந்த நிதி உதவி இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு நெருக்கடி மீண்டும் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு தீர்மானமிக்க செயற்பாடுகளை முன்னெடுக்க உதவும் என்பதோடு, நிலையானதும் போட்டித்தன்மை மிக்கதுமான சூழலை உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.   

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்ட உத்தரவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW