இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும்: அனுர வெளியிட்டுள்ள தகவல்
தனது அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியுடன் 3 பில்லியன் டொலர் கடனைக் கொண்டிருந்ததாகவும், அதனை திறைசேரி பொறுப்பேற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு சுமை
இதன் விளைவாக, இந்தக் கடனை அடைக்க ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாய் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அனுர சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடன் கிட்டத்தட்ட முழுமையாக செலுத்தப்பட்டாலும், லிற்றருக்கு 50 ரூபாய் வசூலிப்பது தொடர்ந்து பொதுமக்களுக்கு சுமையாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒரு முழுமையான மறு ஆய்வு நடத்தி, அதன்படி எரிபொருள் விலையை குறைக்கும் என்று அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |