ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகார பீடம் மற்றும் உயர்பீட உறுப்பினர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான சினேகபூர்வ இராப்போசன விருந்துபசார வைபவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது அந்த கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் நேற்று முன்தினம் (17) இரவு கொழும்பு கொள்ளுபிட்டி விடுதி ஒன்றில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள்
இதன்போது, ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகள், நாட்டின் சமகால அரசியல் பொருளாதார விவகாரங்கள் சஜித் பிரேமதாசவிற்கும் அரசியல் அதிகார பீடம் மற்றும் உயர்பீட உறுப்பினர்களுக்கும் இடையே மிக நீண்ட நேரம் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தநிகழ்வில், சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டுப் பிரதானி சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க மற்றும் லக்ஷ்மன் பென்சேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை, ரிஷாட் பதியுதீனால் ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த 200 மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |