இலங்கையில் எம்பொக்ஸ் நோய்த்தாக்கம் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை

World Health Organization Sri Lanka World
By Laksi Aug 19, 2024 05:07 AM GMT
Laksi

Laksi

 எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சல் இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டிலுள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றில் அதிகபடியான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்பொக்ஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் கடமையாற்றும் அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தடுப்பூசி உற்பத்தி 

அத்தோடு, இதற்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் எம்பொக்ஸ் நோய்த்தாக்கம் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை | Measures Taken To Prevent Spread Of Empox Virus Sl

இந்நிலையில், எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இளம் ஊடக செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட பெண்

இளம் ஊடக செயற்பாட்டாளராக தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட பெண்

நோய் பரவல்

இதேவேளை கொங்கோ குடியரசில் எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலினால் பலியானோர் எண்ணிக்கை 548 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் எம்பொக்ஸ் நோய்த்தாக்கம் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை | Measures Taken To Prevent Spread Of Empox Virus Sl

மேலும் குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பெறுவதற்குப் பதிலாக மத ஸ்தலங்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை மேற்கொள்வதால் நோய் பரவல் அதிகரித்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர்

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW