இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர்

Colombo Sri Lanka United States of America
By Shalini Balachandran Aug 18, 2024 03:46 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

அமெரிக்காவின் (America) தற்காலிக உதவி செயலாளரான ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் (Jennifer R. Littlejohn) இலங்கைக்கு (Sri Lanka) முக்கிய விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஒகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கை இந்தியா (India) மற்றும் மாலத்தீவு (Maldives)ஆகிய நாடுகளுக்கு முக்கிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதனடிப்படையில், ஒகஸ்ட் 19 முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பிற்கு (Colombo) விஜயம் செய்வார் எனவும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்காளிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சஜித்திற்கு விசேடமாக நன்றி தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் : அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

சஜித்திற்கு விசேடமாக நன்றி தெரிவித்த இந்திய உயர் ஸ்தானிகர் : அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு

உதவிச் செயலாளர்

அத்தோடு, அமெரிக்க ஆதரவு வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களைப் பார்வையிடுவது, ஹைட்ரோகிராஃபி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் அமெரிக்க நிபுணர்களுடன் இலங்கையர்களை இணைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வது போன்றன இவர் நிகழ்ச்சி நிரலில் அடங்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர் | Us Assistant Secretary Of State To Visit Sri Lanka

இந்தநிலையில், அவரது வருகையின் போது​​ இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் காற்று மாசுபாடு, காலநிலை நெருக்கடி, காடழிப்பு, இயற்கை குற்றங்கள், சிவில் மற்றும் வணிக விண்வெளி நடவடிக்கைகள், STEM இல் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்குவிப்பது மற்றும் நிலையான நீல பொருளாதாரம் பற்றி விவாதிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணிலை ஆதரிக்கப் போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிப்பு

ரணிலை ஆதரிக்கப் போவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW