அம்பாறையில் பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

By Laksi Aug 19, 2024 09:38 AM GMT
Laksi

Laksi

சமூகம் செயற்திட்டங்களில் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஊடாக நல்லாட்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் செயற்படும் WE Connect திட்டத்தின் ஏற்பாட்டில் செயலமர்வு இடம்பெற்றுள்ளது.

இந்த செயலமர்வானது அம்பாறை மாவட்ட சிவில் சமூக மற்றும், சமூக ஊடக செயற்பாட்டாளர்களின் பங்குபற்றலுடன் சனிக்கிழமை (17) மாளிகைக்காடு பாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பயிற்சி இடம்பெற்றுள்ளது.

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

அபிவிருத்தியைப் பாதிக்கும் விடயங்கள்

இதன்போது, அம்பாறை மாவட்டத்தில் காணப்படும் சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் பிரச்சினைகள் உட்பட நிலைபேறான அபிவிருத்தியைப் பாதிக்கும் பல்வேறு விடயதானங்கள் குறித்து முன்வைப்புகள் இடம்பெற்றன.

அம்பாறையில் பொறுப்புக்கூறலை ஊக்குவித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை | Workshop Organization Of We Connect Project Ampara

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஸ்லம் சஜா நெறிப்படுத்தலில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் குரல்கள் இயக்கத்தின் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான அம்ஜத் முகம்மட், புழுதி சமூக உரிமைக்கான அமைப்பின் செயற்பாட்டாளர் கோபகன் ஆகியோர் நிகழ்வின் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்நிகழ்வின், இரண்டாம் அமர்வின் பிரதம அதிதியாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான முன்னாள் வதிவிட பிரதிநிதி சட்ட முதுமானி அப்துல் அஸீஸ், நிகழ்வின் சிறப்பு அதிதியாக அமெரிக்கன் ஸ்பேஸஸ் பணிப்பாளர் முகம்மட் நௌஸாத் ஆகியோர் கலந்து கெண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதிக்கு மற்றுமொரு விசேட ஆலோசகர் நியமனம்

ஜனாதிபதிக்கு மற்றுமொரு விசேட ஆலோசகர் நியமனம்

வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதியில்லை: நாமல் ராஜபக்ச பகிரங்கம்

வடக்கு கிழக்கினை இணைக்க அனுமதியில்லை: நாமல் ராஜபக்ச பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGallery