அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டமை குறித்து கேள்வியெழுப்பிய ரிஷாட்

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Presidential Election 2024
By Rukshy Aug 19, 2024 09:29 AM GMT
Rukshy

Rukshy

வடக்கு, கிழக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அரசாங்க நிதி இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த நிதி நிறுத்தம் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பதியுதீன் எழுதியுள்ள கடிதத்திலே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

மாதிரி வாக்குச் சீட்டை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல் சட்டத்தை மீறும் செயல் 

பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பதிவு செய்யப்பட்ட கழகங்கள், நலன்புரிச் சங்கங்கள் மற்றும் ஏனைய சமூக அடிப்படையிலான அமைப்புக்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கணிசமான தொகையை ஒதுக்கியமைக்காக எம்.பி பதியுதீன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டமை குறித்து கேள்வியெழுப்பிய ரிஷாட் | Rishad S Letter To The President

எவ்வாறாயினும், அந்த திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறும், எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி அந்த ஒதுக்கீட்டை திரும்பப் பெறுமாறும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், குறித்த விடயத்தில் ஜனாதிபதி தலையிடுமாறும், அந்த கடிதங்களை உடனடியாக இரத்து செய்து, திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குமாறும் ரிஷாட் வலியுறுத்தினார்.

தேர்தல் சட்டத்தை மீறும் செயல் என்பதால், உரிய நிதியை திருப்பிக் கொடுக்காவிட்டால், இதுபோன்ற நெறிமுறையற்ற செயல்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழுவில் முறையிட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

ரிஷாட் தலைமையில் சஜித் பிரேமதாசவிற்கு விருந்துபசார நிகழ்வு

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW