தாம் ஜனாதிபதியானால் எரிபொருள் விலை குறைக்கப்படும்: ஜனக ரத்நாயக்க தெரிவிப்பு

Fuel Price In Sri Lanka Janaka Ratnayake Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 31, 2024 03:10 PM GMT
Laksi

Laksi

தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை ரூபாவால் குறைப்பதே தனது முதல் கடமை என ஜனாதிபதி வேட்பாளரும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் 2022 இல் செய்த 36 பில்லியன் மோசடி எரிபொருள் இறக்குமதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரணிலின் பிரசார மேடையை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் : எழுந்துள்ள சர்ச்சை

ரணிலின் பிரசார மேடையை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் : எழுந்துள்ள சர்ச்சை

எரிபொருள் விலை

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாம் ஜனாதிபதியானால் எரிபொருள் விலை குறைக்கப்படும்: ஜனக ரத்நாயக்க தெரிவிப்பு | Fuel Price Cut If Elected President Janaka

2022ஆம் ஆண்டு எரிபொருள் விலையை 200 ரூபாவினால் குறைக்கலாம் என நான் கூறினேன். இப்போது 150 ரூபாவினால் குறைக்க முடியும்.

நான் ஜனாதிபதியாக பதவியேற்ற முதல் மாதத்திற்குள் இதனை நடைமுறைப்படுத்துவேன்“ என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்: வெளியான தகவல்

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்: வெளியான தகவல்

பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும்

பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW