பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும்

Puttalam Sri Lanka Eastern Province
By Laksi Aug 31, 2024 10:03 AM GMT
Laksi

Laksi

இன்றைய சூழலில் பெண்கள் தமது திறமைகளை அடையாளப்படுத்துவதில் காட்டி வரும் அர்ப்பணிப்பானது பாராட்டத்தக்கது என்றும் அவர்கள் தங்களது மார்க்க விழுமியங்களிலிருந்து தவறாது எந்தத் துறையிலும் முன்னேற முடியும் என்று தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உபவேந்தர் யூ.எல். அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

புத்தளம் புழுதிவயல் பைஸானா பைரூஸ் எழுதிய ‘டுவன்டி ப்ளஸ் 20+’ கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த 2024.08.28 ஆம் திகதி கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள்!

பெண்களின் பங்கேற்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாது ஏனைய நிறுவனங்களிலும் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகின்றது. இவர்கள் பல்வேறு துறைகளில் தங்களது திறமைகளை காட்டிவருகின்றனர்.

பெண்கள் எந்தத் துறையிலும் முன்னேற முடியும் | Womens Talent In Sri Lanka

அந்த வகையில் இலக்கிய துறையில் கலை கலாசார பீட மாணவியான பைஸானா பைரூஸ் ‘டுவன்டி ப்ளஸ் 20+’ என்ற பெயரின் கவிதை நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

இவரது முயற்சியை பாராட்டாமல் இருக்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகளில் ஏனைய மாணவர்களும் தங்களது தடங்களைப் பதிக்க வேண்டும் என்றும் யூ.எல். அப்துல் மஜீத் கேட்டுக்கொண்டார்.

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
Gallery