நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்: வெளியான தகவல்

Sri Lanka Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka
By Laksi Aug 31, 2024 10:39 AM GMT
Laksi

Laksi

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் 331 பட்டதாரிகள் கைதிகளாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு இவர்களில் 66 பேர் சிறை தண்டணை விதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், 256 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

குறித்த தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்

சம்மாந்துறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்

கல்வியில் தேர்ச்சி 

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் சிறைச்சாலையில் 185,056 கைதிகள் இருந்துள்ள நிலையில், அவர்களில் 14,952 பேர் உயர்தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்கள்.

நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள்: வெளியான தகவல் | 331 Graduates In Sl Prison

இது தவிர, சாதாரண தர கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களில் 44,614 பேரும், எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களில் 64,684 பேரும், ஐந்தாம் வகுப்பில்தேர்ச்சி பெற்றவர்களில் 34,673 பேரும், 1-5 தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களில் 20,188 பேரும் சிறைச்சாலையில் உள்ளனர்.

இதேவேளை, பாடசாலைகளுக்கு செல்லாத 5,370 கைதிகள் சிறைச்சாலையில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்

சஜித்திற்கே ஆதரவு : புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

சஜித்திற்கே ஆதரவு : புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW