சஜித்திற்கே ஆதரவு : புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவிப்பு
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரவளிக்கப்போவதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவவி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தலைமையின் தீர்மானத்தைப் பலப்படுத்துவதற்கு, சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலேயே நான் உள்ளேன். என்னை தேசியப் பட்டியலில் எம்.பியாக்கி, புத்தளம் மாவட்டத்தை கௌரவப்படுத்திய கட்சி இது.
ஜனாதிபதித் தேர்தல்
வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றி, புத்தளம் மாவட்ட மக்களை கௌரவப்படுத்திய எமது கட்சியின் தலைவரான ரிஷாட் பதியுதீன் நேர்மையான அரசியல்வாதி. அவருக்குத் துரோகமிழைப்பது சமூகத்துக்கான சாபக்கேடாகவே அமையும்.
அதிகார ஆசைகளுக்காகக் கட்சி தாவியோர், அரசியலில் நிலைத்ததாக வரலாறே இல்லை.
சமூகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் இந்த ஜனாதிபதித் தேர்தலில், எமது கட்சியின் தலைவர் சரியான தீர்மானத்தையே எடுத்துள்ளார். இத்தீர்மானத்தையே நாம் பலப்படுத்த வேண்டும் என நவவி தெரிவித்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு குறித்து தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தீர்மானம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |