பலஸ்தீனத்தை துண்டாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம்! பிரான்ஸ் கடும் கண்டனம்

Palestine World Gaza
By Rakshana MA Aug 17, 2025 04:39 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேற்கு கரையில் புதிய வீடுகள் கட்டும் இஸ்ரேலின் திட்டத்திற்கு பிரான்ஸ் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.  

ஜெருசலேம் நகரின் கிழக்கே சுமார் 3000-க்கும் மேற்பட்ட புதிய குடியிருப்பு கட்டிடங்களை உருவாக்கும் "மேற்கு E1" திட்டத்திற்கு இஸ்ரேல் சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த புதிய குடியிருப்பு கட்டிட திட்டம் செயல்படுத்தப்பட்டால் ரமல்லா மற்றும் பெத்லகேம் ஆகிய பலஸ்தீன நகரங்களுக்கு இடையிலான இணைப்பை பாதிக்கும்.

தேங்காய் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

தேங்காய் விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

புதிய திட்டம்

அத்துடன் இது கிழக்கு ஜெருசலேமை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் இருந்து முழுவதுமாக பிரித்து விடும்.

பலஸ்தீனத்தை துண்டாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம்! பிரான்ஸ் கடும் கண்டனம் | France Slams Israel West Bank Plan

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பேசப்பட்ட வந்த இந்த திட்டத்திற்கு இஸ்ரேல் தற்போது ஒப்புதல் அளித்திருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் மேற்கு கரை பகுதியில் புதிய வீடுகள் கட்டும் இஸ்ரேலின் திட்டத்திற்கு பிரான்ஸ் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப அலுவலரின் அபார சாதனை!

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப அலுவலரின் அபார சாதனை!

வலுக்கும் கண்டனம் 

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை இஸ்ரேல் கைவிட வேண்டும், இது சர்வதேச சட்டத்தை மீறும் நடவடிக்கையாகும் என கண்டித்துள்ளது.

பலஸ்தீனத்தை துண்டாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம்! பிரான்ஸ் கடும் கண்டனம் | France Slams Israel West Bank Plan

இஸ்ரேலின் நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததை அடுத்தே பிரான்ஸின் இந்த கண்டன அறிக்கை வெளியாகியுள்ளது.

முன்னதாக பாலஸ்தீன தனிநாடு என்ற கருத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இந்த திட்டத்தின் நோக்கம் என நிதியமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் அலுவலகம் தகவல் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

திருகோணமலை விவசாயிகள் நில மீட்பு போராட்டம்!

திருகோணமலை விவசாயிகள் நில மீட்பு போராட்டம்!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW