யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து
Jaffna
Fire
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்றையதினம்(16) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
நல்லூர் - கிட்டுப்பூங்கா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்திலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம்
பேருந்தில் தீ பற்றியதைத் தொடர்ந்து யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |