தனியாக ஆட்சி அமைப்பது கடினமான விடயம்.. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்ட தகவல்
இந்த தேர்தல் முறையில் தனியாக ஆட்சி அமைப்பது சிக்கலான ஒரு விடயமாக காணப்படுகின்றது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
யார் பெரும்பான்மையாக வெற்றி பெற்று இருக்கிறார்களோ அவர்களிடம் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கும் நாங்கள் பெரும்பான்மையாக வென்ற பிரதேசங்களில் சகோதரக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.
கட்சி இணைவுக்கான பேச்சு வார்த்தைகள்
சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன், சில இடங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய சிறிய கட்சிகளுடனும் கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தேசிய மக்கள் கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களும் நம்மிடம் பேசி உள்ளனர்.
அத்தோடு, கொழும்பு போன்ற பகுதியையும் எமது அங்கத்தவர்கள் இணைத்து செயல்பட கலந்தாலோசித்து வருகின்றோம்.
மேலும், நமது சகோதர கட்சியான இலங்கை தமிழரசு கட்சியுடனும் சில இடங்களில் நாங்கள் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |