முன்னாள் பிரதம நீதியரசருக்கு வெளிநாடொன்றில் முக்கிய பதவி

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Government
By Laksi May 16, 2025 07:36 AM GMT
Laksi

Laksi

முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவுக்கு (Jayantha Jayasuriya) வெளிநாடொன்றில் முக்கிய பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நியூயோர்க்கில் இருக்கும் இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான அலுவலகத்தில் இலங்கைக்கான வதிவிட நிரந்தரப் பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவை அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நியமித்துள்ளது.

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை வழங்கியுள்ள விசேட அனுமதி

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை வழங்கியுள்ள விசேட அனுமதி

உயர் பதவிகளுக்கான மேற்பார்வைக் குழு

அது குறித்த முன்மொழிவு நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான மேற்பார்வைக் குழுவிடம் முன்வைக்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் ஜயந்த ஜயசூரிய அதற்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதற்கிடையே நாட்டின் பிரதம நீதியரசராக செயற்பட்ட ஒருவர் அரசியல் கட்சியொன்றின் சார்பு நிலையில் செயற்பட்டு, அரசியல் நியமனம் ஒன்றைப் பெற்றுக் கொண்டுள்ளமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளிடையே அதிகரித்துள்ள நோய்த் தாக்கங்கள்: வெளியான எச்சரிக்கை

குழந்தைகளிடையே அதிகரித்துள்ள நோய்த் தாக்கங்கள்: வெளியான எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW