ரோஹண பண்டார எம்.பிக்கு கொலை மிரட்டல்

Government Of Sri Lanka Samagi Jana Balawegaya Local government election Sri Lanka 2025
By Laksi May 16, 2025 11:37 AM GMT
Laksi

Laksi

இனந்தெரியாத நபரால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “கடந்த 14ஆம் திகதி பெயர் குறிப்பிடப்படாத கடிதம் ஒன்றின் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வந்தது.

தங்க விலையில் சடுதியான மாற்றம்!

தங்க விலையில் சடுதியான மாற்றம்!

எச்சரிக்கை கடிதம்

குறித்த கடிதத்தில், மதவாச்சி மற்றும் கெபிதிகொல்லாவ பிரதேச சபைகள் தொடர்பாக, மேலும் அரசியல் நடவடிக்கை எடுக்கவோ அல்லது அதிகாரத்தைப் பெற முயற்சிக்கவோ வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ரோஹண பண்டார எம்.பிக்கு கொலை மிரட்டல் | Death Threats To A Member Of Parliament

அத்துடன், இரண்டு உள்ளூராட்சி மன்றங்களும் ஏற்கனவே நிறுவப்பட்டதாகவும் மேற்கொண்டு முயற்சித்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்

பொலிஸாரிடமும் முறைப்பாடு

குறித்த கடிதம் முத்திரை இன்றி வந்துள்ளது. எனவே, தபால் அதிகாரி ஒருவரின் உதவி இன்றி இதனை செய்திருக்க முடியாது.

ரோஹண பண்டார எம்.பிக்கு கொலை மிரட்டல் | Death Threats To A Member Of Parliament

இது தொடர்பில் நான் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளேன். கடந்த காலங்களில், குறிப்பாக எங்களின் சிறுவயது பராயத்தில் இவ்வாறான மிரட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதம நீதியரசருக்கு வெளிநாடொன்றில் முக்கிய பதவி

முன்னாள் பிரதம நீதியரசருக்கு வெளிநாடொன்றில் முக்கிய பதவி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW