உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு
திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த உடலானது நேற்று(16) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த எட்வேட் கோமர் (வயது 70) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
மேற்படி நபர் அணிந்திருந்த உடையை வைத்து இது தனது தந்தை என அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளார்.
அந்த நபர் காணாமல்போயுள்ளார் என்று அவரது குடும்பத்தினரால் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |