ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகள் வெளியாகும் நேரம் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கையின் இந்த வருடத்திற்கான ஜனாதிபதித் தேர்தலின் முதல் முடிவுகள் இன்று (21) நள்ளிரவுக்குள் வெளியாகும் என தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (21) விசேட ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அஞ்சல் மூலமான வாக்குகளாகவோ அல்லது பதிவான வாக்குகளின் மூலமாகவோ முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்பது வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அதிகாரிகளின் திறமையைப் பொறுத்தே அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
முதல் முடிவுகள்
எவ்வாறாயினும், கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இன்று நள்ளிரவில் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள 429 வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நடவடிக்கை மாலை 4.00 மணிக்குத் தொடங்கும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் முடிவடைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |