இணைய வழி பணப்பறிமாற்றங்களை மேற்கொள்வோருக்கு வெளியான தகவல்
இணையவழி(Online) மூலம் பண பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது வங்கிக் கணக்கிலிருந்து கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டண மாற்றத்தின் படி, இனிமேல் ஒன்லைன் மூலம் பணம் பரிமாறும் போது ரூபாய் 25 மட்டுமே வங்கிக் கணக்கிலிருந்து கழிக்கப்படும்.
இணைய வழி பணப்பரிமாற்றங்கள்
இதற்கு முன்பு, ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பும் போது, ரூபாய் 30 கூடுதலாக கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த மாற்றம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் கலந்துரையாடல் நடத்தியதன் விளைவாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகம் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டணக் குறைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |