விவசாயிகளுக்கு உரமானியம் மற்றும் நட்டஈடு வழங்கல் தொடர்பில் வெளியான தகவல்

Government Of Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Rakshana MA Jan 16, 2025 09:54 AM GMT
Rakshana MA

Rakshana MA

கடந்த வருடத்திற்கான உர மானியத்தில் 95 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், சில பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் தமது வயல்களில் அறுவடைக்கு வரவுள்ள நிலையிலும், இதுவரை உர மானியம் கிடைக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை, அதிக பருவத்தில் உர மானியமாக 97,000 விவசாயிகளுக்கு 18,035 மில்லியன் ரூபா திறைசேரியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 97,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதாகவும் விவசாய சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

கொழும்பில் இன்று 12 மணி நேர நீர் விநியோகத்தடை

உரமானியம் 

இதற்கிடையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பயிர்கள் அதிகளவில் சேதமாகியிருந்தன. இந்த நிலையில் இதற்கான இழப்பீடு தற்போது சில மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.

[

மேலும், பொலன்னறுவை, அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களில் இந்த மாத இறுதிக்குள் இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், பெப்ரவரி மாத தொடக்கத்தில் மட்டக்களப்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் நட்டஈடு வழங்கும் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன் உற்பத்திகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன் உற்பத்திகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

சீமெந்து விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சீமெந்து விலை தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW