சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன் உற்பத்திகள் : வெளியான அதிர்ச்சி தகவல்

Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Food Crisis
By Rakshana MA Jan 15, 2025 08:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் டின்மீன்களில்(Tin fish) அரைவாசிக்கும் அதிகமான டின்மீன்கள் எந்தவித தரச்சான்றிதழ்களும் அற்றவை எனும் தகவல் வெளியாகியுள்ளன.

இதன்படி, இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் அடிப்படைியில், தற்போது இலங்கையில் 28 நிறுவனங்கள் டின்மீன்களை சந்தைப்படுத்துகின்றன.

எனினும், இவற்றில் 15 நிறுவனங்கள் மட்டுமே தரச்சான்றிதழ் உள்ளிட்ட அனுமதிகளைப்பெற்றுள்ளன என குறிக்கப்பட்டுள்ளது.

அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள DS சேனநாயக்க வான்கதவு : கரையோர வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள DS சேனநாயக்க வான்கதவு : கரையோர வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

டின்மீன்களின் தரம் 

இந்த நிலையில், அவற்றின் மூலமாக சந்தைப்படுத்தப்படும் 48 வகையான டின்மீன்களுக்கு இலங்கை தரச்சான்றிதழ் நிறுவனத்தின் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

சந்தைப்படுத்தப்படும் தரமற்ற டின்மீன் உற்பத்திகள் : வெளியான அதிர்ச்சி தகவல் | Tinfish Products Marketed In Sri Lanka

அத்துடன், ஏனைய 13 நிறுவனங்களுக்கும் எதுவித தரச்சான்றுகளும் வழங்கப்படாத நிலையிலேயே அவற்றின் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுவதாக தேசிய கணக்காய்வு நிறுவனத்தின் அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.  

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் மரணம்

சம்மாந்துறையில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் மரணம்

இலங்கையிலிருந்து இரத்தினக்கல் கடத்தல் : கைதான சீன தந்தையும் மகளும்

இலங்கையிலிருந்து இரத்தினக்கல் கடத்தல் : கைதான சீன தந்தையும் மகளும்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW