இலங்கையிலிருந்து இரத்தினக்கல் கடத்தல் : கைதான சீன தந்தையும் மகளும்
இலங்கையில் இருந்து சீனாவிற்கு(China) இரத்தினக்கற்களை உள்ளாடைக்குள் மறைத்து கொண்டு செல்ல முயன்ற சீன தந்தையும் மகளும் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சீனப்பிரஜைகள், சீனாவின் செங் விங் எனும் இடத்திற்கு செல்ல வந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள DS சேனநாயக்க வான்கதவு : கரையோர வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இரத்தினக்கற்கள்
மேலும், நடத்தப்பட்ட சோதனைகளின் போது, இந்த சீன தந்தை மற்றும் மகளுக்கு சொந்தமான சந்திரகாந்தி, கோமேதா, அறநூல், வைரோடி ரகங்களைச் சேர்ந்த சுமார் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியினை உடைய இரத்தினக்கற்கள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த இலங்கை வதிவிட வீசாதாரர்கள் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |