அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள DS சேனநாயக்க வான்கதவு : கரையோர வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

By Rakshana MA Jan 15, 2025 05:04 AM GMT
Rakshana MA

Rakshana MA

அம்பாறை டீ.எஸ்.சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 104 அடிகளாக அதிகரித்துள்ளதால் குறிப்பிட்டளவு நீரை வெளியேற்றுவதற்காக ஒரு வான்கதவு நேற்று(14) மாலை 5 மணிக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளா் எம்.சி.எம்.றியாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

ஏற்கனவே நீரோடும் பகுதிகளில் நீர் நிரம்பி வழிவதால் பெருமளவு நீரைத் திறந்து விட்டால் வெள்ளப் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் எனக் கருதி, நீர் மின் உற்பத்தி நிலையத்தை நோக்கியே நீரை (வெளிப்பாய்ச்சல் அளவு – 800 கியு செக்கன்) திறந்து விட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இணைய கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

இணைய கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

வான்கதவு திறப்பு 

எவ்வாறாயினும், இதிலிருந்து வெளியேரும் நீரானது கல்லோயா நீருடன் கலந்தே கடலை நோக்கிச் செல்லும் என்பதாலும் மழை தொடர்ந்து பெய்வதாலும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டும்.

அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள DS சேனநாயக்க வான்கதவு : கரையோர வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Opening Of Ds Senanayake Samudra S Air Hatch

மேலும், டீ.எஸ்.சேனநாயக்க நீர்த்தேக்கத்தின் ஆகக் கூடிய நீர்மட்டம் 110 அடிகளாக காணப்படுகின்ற நிலையில், நிலையியற் கட்டளையின் படி அம்பாறை அரச அதிபர், நீர்ப்பாசன திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன.

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய இயந்திரம்

மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காண கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய இயந்திரம்

எச்சரிக்கை 

தொடர்ந்தும் வான்கதவு திறந்ததன் காரணமாக வளத்தாப்பிட்டி புகைபரிசோதனை நிலையத்திற்கு அருகாமையில் அதாவது (காஞ்சரையடி பொலிஸ் சோதனைச்சாவடி) முற்றாக நீரில் மூழ்கியுள்ளதால் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

அம்பாறையில் திறக்கப்பட்டுள்ள DS சேனநாயக்க வான்கதவு : கரையோர வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Opening Of Ds Senanayake Samudra S Air Hatch

எனவே இப்பகுதியால் பயணம் செய்பவர்கள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அரசியல்வாதிகளிகளின் தலையீட்டில் வேலைவாய்ப்பு மோசடி : இஸ்ரேல் எடுத்துள்ள தீர்மானம்

முன்னாள் அரசியல்வாதிகளிகளின் தலையீட்டில் வேலைவாய்ப்பு மோசடி : இஸ்ரேல் எடுத்துள்ள தீர்மானம்

பச்சை அரிசி கிலோ 300 ரூபாய்! பஸ்ஸுக்கு 250 ரூபாய் : மக்கள் கடும் விசனம்

பச்சை அரிசி கிலோ 300 ரூபாய்! பஸ்ஸுக்கு 250 ரூபாய் : மக்கள் கடும் விசனம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW