முன்னாள் அரசியல்வாதிகளிகளின் தலையீட்டில் வேலைவாய்ப்பு மோசடி : இஸ்ரேல் எடுத்துள்ள தீர்மானம்

Immigration Sri Lankan Peoples Department of Immigration & Emigration Israel Gaza
By Rakshana MA Jan 13, 2025 12:30 PM GMT
Rakshana MA

Rakshana MA

கடந்த இரண்டு வருடங்களில் 5,000 இற்கும் அதிகமான இலங்கையர்களிடம் இருந்து இஸ்ரேலிலுள்ள வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பல்வேறு பண மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

குறித்த மோசடிகள் முன்னாள் அரசியல்வாதிகளின் தலையீட்டில் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன்படி, வேலையை பெற்றுதருவதாக கூறிய சில முன்னாள் அரசியல்வாதிகளுக்கு, அதற்கான பணத்தை குறித்த தரப்பு வழங்கியுள்ளதாகவும், மோசடி நிலை காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் இரண்டு ஆண்டுகளாக வேலைகளைப் பெறுவதற்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புனித ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து 3,500 பேர் அனுப்ப ஒப்பந்தம்

புனித ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து 3,500 பேர் அனுப்ப ஒப்பந்தம்

அரசாங்கத்தின் தீர்மானம் 

மேலும், இஸ்ரேலிய அரசாங்கத்தால் நாட்டிற்கு வழங்கப்பட்ட 10,000 வேலைகள் என்ற ஒதுக்கீட்டின் கீழ் அரசியல் காரணங்களுக்காக விவசாயத் துறையில் வேலைக்கு தகுதியற்ற நபர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தொடர்புடைய வேலைகளை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்குச் சென்றதால் நாடு அந்த வேலை ஒதுக்கீட்டை இழந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்திருந்தது.

முன்னாள் அரசியல்வாதிகளிகளின் தலையீட்டில் வேலைவாய்ப்பு மோசடி : இஸ்ரேல் எடுத்துள்ள தீர்மானம் | Employment Fraud In Sri Lanka

இந்த நிலையில், சுமார் 2,000 பேர் அந்த வேலைகளுக்கு அனுப்பப்பட்டாலும், மீதமுள்ள 8,000 வேலைகள் மேற்கூறிய காரணங்களால் இழக்கப்பட்டதாகவும், அதன்படி, இஸ்ரேலிய வேலைகளை வெளிப்படையாக வழங்குவதற்கும், நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கும் ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இறக்காமம் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக விசேட கூட்டம்

இறக்காமம் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக விசேட கூட்டம்

பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! வெளியான காணொளி

பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி! வெளியான காணொளி

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW